வெறுத்து போய் உக்காந்தப்போ தான் நம்ம மொக்கை மாயாண்டி சொன்னாரு, " மாப்பிள்ளை, மொக்கை போடறதுல தப்பே இல்லை. அவன், அவன் ஆபீஸ்ல பிரஷர் தாங்க மாட்டம்ம தான் பிளோக படிக்க வர்றான். நாம சீரியஸ் மேட்டர் எழுதுனோம்னு வச்சிக்க, அப்பிடியே அப்பீட் ஆகிருவான். அதனால மாப்பிளை, நாலு பேரு சந்தோஷமா இருக்கனும்னா மொக்கை போடறதுல தப்பே இல்லை."
இப்பிடி தலயில சுத்தியலால் அடிச்சு, ஞானோதயம் பண்ணாறு நம்ம மாயாண்டி அண்ணாச்சி. இருந்தாலும் இலக்கியம், உலக சினிமாவை நம்மளால வுட முடியாதேன்னு யோசிச்சேன். சரி வுடு, கொஞ்சம் மொக்கையோட சேர்த்து இதையும் போடுவுமேனு முடிவுக்கு வந்திருக்கேன்.
பி.எச்.டி பண்ணலாம்னு ஆசையோட தான் அமெரிக்காகுள்ள நுழைஞ்சேன். ஆனா இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சது, முதுகலை முடிக்கிறதுக்குள்ள முதுகெலும்பு உதிந்திரும்ங்கறது. அதனால டாக்டர் ஆகலம்ன்ற ஆசையை மூட்டை கட்டி வச்சிட்டு, முதுகலையை முடிக்க போறேன்.
பி.எச்.டி காமிக்ஸ்'ன்னு ஒரு வெப்சைட் இருக்குதுங்கோ. (இதை எனக்கு அறிமுகப் படுத்தியவர் எங்கள் அண்ணன் பிரஷாந்த், பி. எச். டி மாணவர்) ஒரு கிராஜூவேட் மாணவன் தன் பல்கலைகழகத்தில் படும் பாடு தான் மூலக் கரு.
ஒரு சாம்பிள்'க்கு இன்னைக்கு ஒரு படமுங்கோ. அது சரி, யாரு அந்த மொக்கை மாயாண்டி'னு கேக்காதீங்கோ, அது சஸ்பென்ஸ்... :D

6 comments:
//
வெறுத்து போய் உக்காந்தப்போ தான் நம்ம மொக்கை மாயாண்டி சொன்னாரு, " மாப்பிள்ளை, மொக்கை போடறதுல தப்பே இல்லை. அவன், அவன் ஆபீஸ்ல பிரஷர் தாங்க மாட்டம்ம தான் பிளோக படிக்க வர்றான். நாம சீரியஸ் மேட்டர் எழுதுனோம்னு வச்சிக்க, அப்பிடியே அப்பீட் ஆகிருவான். அதனால மாப்பிளை, நாலு பேரு சந்தோஷமா இருக்கனும்னா மொக்கை போடறதுல தப்பே இல்லை."
//
ரிப்பீட்டேய்!!
கவலைப்படாதீங்ணா...ஆனா, நீங்க மூனு வருஷத்தில ஆறு போஸ்ட் எழுதியிருக்கீங்க....ரொம்ப ஸ்லேவா இருக்கே :0))
@ அது சரி
நன்றி நண்பா. இனிமேல் வெயிட்டா எழுதிருவோம்...
Thambi I was following up with ur blogs, it doesn't mean that no one is following if u r not getting any comments.
நிறைய எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்..
அட கோதாவிலே குதிங்க நண்பரே ...
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
Post a Comment